குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹின்பாக் போராட்டம் நீடிப்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஷஹின் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வரும் தர்ணா போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. உச்சநீதிமன்றம் நியமனம் செய்த சமரசக் குழு கடந்த இரண்டு நாட்களாக போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த விதத் தீர்வும் எட்டப்படவில்லை.
நேற்று போராட்டக்காரர்களை சந்தித்த மத்தியஸ்தர் குழு தலைவர் சஞ்சய் ஹெக்டே, இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்பதால் தமது பேச்சைக்கேட்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த முயற்சிக்கு போராட்டக்குழுவினர் உடன்படவில்லை என்பதால் இன்றும் சமரசக்குழுவினர் போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சு நடத்த உள்ளனர்.
போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவரையில் போராட்டம் நடத்தினால் உங்கள் குரலை உச்சநீதிமன்றம் கேட்கும் என்றும் மத்தியஸ்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments