குழந்தைகள் வாழ தகுதியான நாடுகள் பட்டியல்...இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டன. இந்தப் பணியில் உலகம் முழுவதிலிருந்து 40-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலும், குழந்தைகளின் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு பட்டியலும் தயாரிக்கப்பட்டன. இவை தொடர்பான அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அடிப்படையிலான பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 180 நாடுகளில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments