வூகானில் இருக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வருவதில் தாமதம்

0 1106

கொரோனா பாதிப்பு உள்ள சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்து வரத் திட்டமிட்டிருந்த நிலையில், போயிங் சி 17 விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மருந்துகளுடன் சீனா செல்லும் அந்த விமானம் 100 இந்தியர்களுடன் திரும்பி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விமானம் இன்னும் புறப்படாமல் சீன அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதர நாட்டு பயணிகளையும் இந்த விமானம் அழைத்து வருமா என்று செய்தியாளர்கள் கேட்ட போது மலேசியா அரசு மட்டும் தான் இத்தகைய ஒப்பந்தத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இரண்டு முறை இந்திய விமானங்களில் வந்த 640 பேரில் ஏழு மலேசியர்கள் இருந்ததாகவும் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments