தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? அரசு மருத்துவமனையில் ஒத்திகை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் புகுந்தால், அவர்களிடம் இருந்து பணயக் கைதிகளை மீட்பது தொடர்பான காவல்துறையின் ஒத்திகை நடவடிக்கைகளை பிரத்யேக காட்சிகளுடன் விளக்குகின்றது
தமிழகத்தில் 16 இடங்களில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறையில் இருந்து வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அச்சுறுத்தலுக்குரிய இடங்களில் ஒன்றான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மாக்ட்ரில் (mock drill) எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்திக்கட்டப்பட்டது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தீவிரவாதியை மீட்க ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 4 தீவிரவாதிகள், நோயாளிகளை பணயக் கைதியாக பிடித்து வைத்திருப்பதையும் அவர்களிடம் இருந்து அதிரடியாக எப்படி காப்பாற்றுவது என்பதையும் நிகழ்த்திக் காட்டினர் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் முதலில் தனியார் காவலாளிகளை சுட்டுவிட்டு, வேகமாக 3-வது தளத்துக்கு செல்கின்றனர்
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை சுட்டுவிட்டு தீவிரவாதியை மீட்டு, 3 வது தளம் முழுவதையும் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். நோயாளிகளையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றனர்
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. அடுத்த சில வினாடிகளில் அங்கு வரும் அதிவிரைவு படையை சேர்ந்த 35 வீரர்கள் மருத்துவமனையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசிக்கின்றனர்
அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டு மருத்துவமனையின் பின் பக்கம் வழியாக 3 வது மாடிக்குள் நுழைகின்றது அதிவிரைவுபடை
3 வது தளத்தில் மோப்ப நாயுடன் பதுங்கிச் சென்று அதிரடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்
இறுதியாக அனைத்து தீவிரவாதிகளையும் தீர்த்துக் கட்டிவிட்டு நோயாளிகளை மீட்கின்றனர்
5 விஜயகாந்த் படங்களைப் பார்த்தது போன்று இருந்தது தமிழக காவல்துறையினரின் அதிரடியான இந்த மாக் ட்ரில்..!
பாதுகாப்பு ஒத்திகை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தன அங்கு நடைபெற்ற காட்சிகள்!
Comments