இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

0 1475

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்களை சேர்த்துள்ளது. வெல்லிங்டனில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் தொடங்கிய இந்திய அணி வீரர்களால் நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் 101 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பிருத்வி ஷா 16, மயங்க் அகர்வால் 34, புஜாரா 11, விராட் கோலி 2, ஹனுமா விஹாரி 7 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

அணியின் ஸ்கோர் 122 ஆக இருந்தபோது தேநீர் இடைவேளை வந்தது. இதன்பிறகு மழை பெய்யத் தொடங்கியதால் போட்டி தடைபட்டது. அதன்பிறகு முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments