குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி - பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷம் போட்ட பெண் கைது

0 3727

பெங்களூரில் AIMIM இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைசியின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மேடையில் முழக்கமிட்ட இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி பேசும் போது, அமுல்யா என்ற பெண் மேடையேறி வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டார். அவரை தடுக்க ஓவைசி முயன்ற போதும் அப்பெண் கேட்கவில்லை. இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்

இச்சம்பவத்திற்கு ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் கருத்தை மறுத்த அவர், இந்தியா ஜிந்தாபாத் என்பதே தமது கொள்கை என்று கூறினார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments