சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0 1787

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தமக்கு 3 புள்ளி 87 கோடி மதிப்புக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாயுடு குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி தமக்கு மொத்தம் 9 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருந்தாலும், 5 புள்ளி 13 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் 5 வயதான அவரது பேரன் நர தேவன்ஷின் (Nara Devansh) சொத்து மதிப்பு 19 கோடியே 42 லட்சமாக உயர்ந்துள்ளது. இரண்டாவது ஆண்டாக இது சந்திரபாபுவின் சொத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments