அவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

0 1475

அவினாசி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேரவையில் இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அவர், காயமுற்ற 23 பேருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

உறவினர்களுக்கு விவரங்கள் தெரிவிக்க உதவி மையம் அமைக்கவும், உடல்களை கொண்டு செல்ல உதவிகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

நேபாள நாட்டு சுற்றுலா பேருந்து ஓமலூர் அருகே விபத்துக்குள்ளானத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அவர், காயமுற்ற 24 பேருக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments