ராணுவத்தில் பெண்கள்..!
ராணுவத்தில் பெண்களுக்கு நீண்டகால பணியமர்வு அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்ததுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே ((MM Naravane)) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், ராணுவத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கடந்த 1993 முதல் ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 17 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், ராணுவத்தில் ஆண்களை மட்டும் முன்னிலைப்படுத்தி, பெண்களை பலவீனமானவர்களாக சித்தரிக்கும் போக்கு நெருடலாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
ராணுவத்தில் சில குறிப்பிட்ட பதவிகளை மட்டுமே பெண்களால் கையாள முடியும் என்ற வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்புக்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
Comments