பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தீவிரவாத குற்றங்களுக்கு இணையாக விசாரிக்க வேண்டும் - காவல்துறைக்கு பிரதமர் அறிவுறுத்தல்

0 1455

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்களை, தீவிரவாத குற்றங்களுக்கு இணையான வகையில் விசாரிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்திய தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த டிசம்பரில் புனேவில் நடந்த மாநில காவல் துறை தலைவர்களின் மாநாட்டில் பேசிய மோடி நலிவடைந்த பிரிவினரை குறி வைத்து நடக்கும் வன்முறைச் சம்பவங்களில் காவல்துறையினர் வேகத்துடனும், விவேகத்துடனும்  செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக, நிர்பயா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியை மாநிலங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி கூறியதாகவும் மாநாட்டுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments