மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அமைச்சரவை தீர்மானம் ஜூரோ - மத்திய அரசு
7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்னை விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கில் மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதம் நிராகரிக்கப்பட்டதாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் சட்டவிரோத காவல் இல்லை என்றும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது என்றும் பரிந்துரைத்ததுடன் அரசின் கடமை முடிந்ததாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
Comments