பிரபல கன்னட தொழிலதிபர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனங்களில் முறைகேடு

0 1430

அபுதாபியின் பிரபல தொழிலதிபரும், கர்நாடகாவைச் சேர்ந்த கோடீஸ்வரருமான பி.ஆர்.ஷெட்டியின்((BR Shetty)) நிறுவனங்களில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அபுதாபியில் என்.எம்.சி. ஹெல்த் மருத்துவமனை, யு.ஏ.இ. எக்சேஞ்ச் உள்ளிட்ட பல நிறுவனங்களை இவரது குழுமம் நடத்துகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின் பங்குகளை பி.ஆர்.ஷெட்டி தனது சொந்த ஆதாயத்திற்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காவும்  பல வங்கிகளில் அடகு வைத்துள்ளதாக முதலீட்டு புலனாய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்தது.

பொய்யான வரவு செலவு அறிக்கைகளை  தாக்கல் செய்ததுடன், நிறுவனத்திற்கு இருக்கும் கடன் பற்றிய தகவல்களும் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  இதை அடுத்து ஷெட்டியின் நிறுவன பங்குகள் 70 சதவிகித வீழ்ச்சியை சந்தித்தன. இதை அடுத்து நிறுவனத்தின் இணைத்தலைவர் என்ற பொறுப்பில் இருந்து அவர் கடந்த 17 ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments