அருணாசல பிரதேசத்துக்கு அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்பு

0 2436

அருணாசலப் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அந்த மாநிலம் உருவாக்கப்பட்டதன் 34ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமித் ஷா இன்று கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். 

இந்த பயணம் குறித்து, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் (Geng Shuang), அருணாசலப் பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியை சீன அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், அப்பகுதி திபெத்தின் தென்பகுதி என்பதில் சீனா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது என்றும் கூறினார்.

அருணாசல பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் செல்வது சீன இறையான்மைக்கு எதிரானது எனவும், எல்லையில் நிலவும் ஸ்திரதன்மை, இருநாடுகளிடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கையை பாதிக்கும் செயல் எனவும், இருநாடுகளின் ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments