டெல்லி அரசுப்பள்ளியை ட்ரம்பின் மனைவி பார்வையிட இருப்பதாக தகவல்

0 1216

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய பயணத்தின் போது அவரது மனைவி மெலானியா, டெல்லி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் மகிழ்ச்சி வகுப்புகளை பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் இந்தியா வரும் ட்ரம்ப் அகமதாபாத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு, மனைவி மெலானியாவுடன் தாஜ்மகாலையும் பார்வையிடுகிறார்.

பின்னர் டெல்லி வரும் அவர், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சமயத்தில் மெலானியா ட்ரம்ப் டெல்லியிலுள்ள அரசுப் பள்ளியை பார்வையிடுவார் என்றும், அவரை முதலமைச்சர் கெஜ்ரிவால் வரவேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான யோகா, தியானம் போன்றவை அடங்கிய மகிழ்ச்சி வகுப்பையும் மெலானியா பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments