விமானமே இல்லாமல் வானில் பறந்த விமானி..!
துபாயில் ஜெட்விமான விமானங்களை தயாரிக்கும் "ஜெட்மேன்' எனும் நிறுவனம் தனிமனிதனால் இயக்கப்படும் ஜெட் விமானத்தை தயாரித்து உள்ளது.
துபாயை மையமாக கொண்டு செயல்படும் ஜெட்மேன் நிறுவனம் தனிமனிதன் பயணிக்கும் இந்த கார்பன் பைபர் ஜெட்சூட்டை தயாரித்துள்ளது. இதன் மூலம் மனிதன் தனியாகவே இந்த சூட்டை அணிந்து கொண்டு, நம்முடைய உடல் அசைவுகள் மூலம் இந்த ஜெட் விமானத்தை இயக்கி வானில் பறக்கலாம்.
.@expo2020dubai and #Jetman break record for first complete autonomous human flight#Dubai #Expo2020pic.twitter.com/gD6QkbZLoR
.@expo2020dubai and #Jetman break record for first complete autonomous human flight#Dubai #Expo2020pic.twitter.com/gD6QkbZLoR
— Abu Dhabi Central (@AbuDhabiInFocus) February 19, 2020
இதன் சோதனை ஓட்டம் துபாயில் உள்ள புகழ்பெற்ற ஜுமேரா கடற்கரையில் நடந்தது. இதில் வின்ஸ் ரெஃபெட் எனும் விமானி இந்த ஜெட் சூட்டை அணிந்து வெற்றிகரமாக வானில் பறந்தார். மணிக்கு 400 கிலோமீட்டர் வேகம் வரையிலும் பறக்கும் இந்த விமானத்தில்,விமானி வின்ஸ் ரெஃபெட் 3 நிமிட சோதனை ஓட்டத்தில் சுமார் 1000 மீட்டர் உயரம் பறந்தார்.ஜெட் விமானங்களின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைத்துள்ளது.
Comments