வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில்பாலாஜி

0 1000

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி  அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவிற்காக மார்ச் 3-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments