பல்லாவரம், மதுரவாயல் தாலுகாக்களில் இந்த ஆண்டு நீதிமன்றம் துவங்கப்படும்

0 917

பல்லாவரம், மதுரவாயல் தாலுகாக்களில் இந்த ஆண்டு நீதிமன்றம் துவங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அவர், அனைத்து தாலுக்காக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கொள்கை முடிவு எடுத்து, நீதிமன்றங்கள் இல்லாத தாலுக்காக்களிலும் படிப்படியாக நீதிமன்றங்கள் துவங்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டிட பணிகள் துவங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நீதிமன்றம் இந்த ஆண்டே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments