கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட உமர் அக்மலுக்கு தற்காலிக தடை

0 804

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிக தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இப்போட்டியில், குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடும் உமர் அக்மலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலுள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம் அண்மையில் விசாரணை நடத்தியது.

இதை சுட்டிக்காட்டி அந்த ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உமர் அக்மலுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments