மத்திய ஊழல் கண்காணிப்பு மற்றும் தகவல் ஆணையம் ஆகியவற்றுக்கு புதிய தலைவர்கள் நியமிப்பு

0 11108

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய தகவல் ஆணையம் (CVC and CIC) ஆகியவற்றுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. சவுத்ரி (KV Chowdary) கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து அப்பதவி காலியாக இருந்தது. இதேபோல் மத்திய தகவல் ஆணையர் தலைவர் பதவியும் சுதிர் பார்கவா (Sudhir Bhargava) ஓய்வுக்கு பிறகு ஒரு மாதத்துக்கும் மேலாக காலியாக இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரியை (Adhir Ranjan Chowdhury ) கொண்ட குழுக்களால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், குடியரசுத் தலைவரின் செயலருமான சஞ்சய் கோதாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய தகவல் ஆணைய தலைவராக முன்னாள் தகவல் ஒளிபரப்புத் துறை செயலரும், மூத்த தகவல் ஆணையருமான பிமல் ஜுல்கா (Bimal Julka) நியமிக்கப்பட்டுள்ளார்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments