கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 13 குருவிகள் கைது
வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த குருவிகள் 13 பேர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சோதனையில் சிக்கியுள்ளனர்.
மலேசியா, இலங்கை, துபாய் விமானங்களில் வந்த பயணிகளை நிறுத்தி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 13 பயணிகளிடமிருந்து கோடிக்கனக்கான ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ராணிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்கள் அனைவருமே கடத்தல் குருவிகள் என்றும், பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்திவருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. சுங்கத்துறையில் உள்ள சிலரின் ஒத்துழைப்போடு இந்த கடத்தல் அரங்கேறுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டதில் 2 அதிகாரிகள் கடத்தல் ஆசாமிகளுக்கு துணை போனது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Comments