தூக்கு தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா வழக்கு குற்றவாளி முயற்சி
தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, சுவரில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.
குற்றவாளிகள் 4 பேரையும் சிசிடிவி பொருத்தி 24 மணி நேரமும் சிறை வார்டன்கள் கண்காணித்து வரும் நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்டு வினய் சர்மாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிறைக் கம்பிகளுக்கு இடையே கையை நுழைத்து எலும்பு முறிவை ஏற்படுத்தவும் வினய் சர்மா முயன்றதாக சொல்லப்படுகிறது. மார்ச் 3ஆம் தேதிக்கு தூக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் மிகவும் ஆக்ரோசமாக நடந்து கொள்வதாகவும், வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய இருவரும் உண்ண மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தூக்கு தண்டனை கைதிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ உடல் எடை மிகவும் குறைந்துபோனாலோ சரியாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments