இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் - இலங்கை அமைச்சர்
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முறையிட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனவர்களினால் இலங்கை கடல் வளம் சுரண்டப்படுவதாகவும், அதற்காக இந்திய அரசிடம் இழப்பீடு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments