ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்களுடன் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை
டெல்லியின் ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் உள்ளிட்டோரிடம் மத்தியஸ்தர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த குழு 2 மாதங்களுக்கும் மேலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் அமைப்பிடம் பேச்சு நடத்தினர்.
சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன், உள்ளிட்டோர் ஏற்கனவே போராட்டக்காரர்களுடன் சமரசப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர உள்ளனர்.
Comments