பலூசிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 பாக். வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை, மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் தோழமை படைகளின் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராணுவ முகாம்களிலேயே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி பெறுவதாகவும் பலூசிஸ்தான் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பலூசிஸ்தான் பாகிஸ்தானின் பாதி என்றும் அங்கு வாழும் சிறுபான்மை மக்களை மதக்கல்வியின் பெயரால் மூளைச்சலவை செய்யும் பாகிஸ்தான் அரசின் முயற்சி பலிக்காது என்றும் பலூசிஸ்தான் ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் ஆர்யா தெரிவித்தார்.
Comments