பறக்கும் விமானத்தில் கதவைத் திறக்க முயன்ற பயணிகள்

0 914

பறக்கும் விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற சில பயணிகளால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 110 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஜெட்டா நோக்கி புறப்பட்டது. அப்போது விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற 5 பயணிகள் போர்டிங் பாஸ் தொலைத்து விட்ட தங்கள் இரண்டு சகாக்களையும் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதனால் விமானம் மீண்டும் புறப்பட 3 மணி நேரம் தாமதமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments