டென்னிஸ் புயலால் நிலைகுலைந்தது இங்கிலாந்து

0 931

இங்கிலாந்தில் வீசிய புயல் காரணமாக அங்கிருந்த அணை ஒன்று நிரம்பி வழியும் காட்சி வெளியாகி உள்ளது. சவுத் வேல்ஸ் பகுதியை கடந்த சில தினங்களுக்கு முன் டென்னிஸ் புயல் தாக்கியது.

இதனால் அப்பகுதியில் கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

டென்னிஸ் புயல் தாக்கியதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு தேசிய அவசரநிலையை பிறப்பித்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கேபன் கோச் என்ற அணை நிரம்பியுள்ளது.

சுமார் 120 அடி உயரம் கொண்ட அந்த தடுப்பணை முற்றிலும் நிரம்பியதால் அதன் மேல்புறத்தில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments