யோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..! நியூ மேரேஜ் பரிதாபம்

0 1950

டிகர் யோகிபாபுவை ஒருதலையாக காதலித்த துணை நடிகை ஒருவர், அவருக்கு திருமணமான நாள் முதல் டிக்டாக்கில் சோககீதம் இசைத்து வருகிறார். காமெடி நாயகனின் மணவாழ்க்கைக்கு விபூதி அடிக்க பார்த்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையாக தமிழ் சினிமாவில் நிலவி வரும் காமெடி பஞ்சத்தால் காமெடியனானவர் நடிகர் யோகிபாபு..!

அண்மையில் உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் யோகிபாபுவின் மணவாழ்க்கையில் டிக்டாக் வடிவில் உள்ளே புகுந்த குட்டிச்சாத்தான் ஒன்று கும்மி அடித்து வருவதாக திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இவர் தான் டிக்டாக்கில் யோகிபாபுவின் காதலியாக காட்டிக் கொண்டு காதலுக்கு தூதாக வீடியோக்களை பதிவிட்டு வரும் சுஜி பிரதீபா..!

யோகிபாபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை டிக்டாக்கில் முகப்பு படமாக வைத்துள்ள சுஜி பிரதீபா, சினிமாவில் ஒரு துணை நடிகை என்று கூறப்படுகின்றது. 

கடந்த சில வாரங்களாக யோகிபாபுவின் படத்தை பின் பக்கம் வைத்துக் கொண்டு அவரது காதலி போல ரொம்ப ஃபீல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்

யோகிபாபுவை தனது காவல்காரன் என்பது போல எல்லாம் வர்ணித்து வாயசைத்தது இந்த காதல் புறா..!

சினிமாவில் கிடைக்காத கதாநாயகி வாய்ப்பை டிக்டாக்கில் அப்படியே 50 ரேவதியாக அள்ளிக் கொட்டினார் சுஜி..!

யோகிபாபுவை காதலிப்பதாக விதவிதமாக காதல் கீதம் இசைத்து ஆர்ட்டின் விட்ட சுஜிக்கு நடுமண்டையில் சுத்தியலால் நச்சென்று அடித்தது போல யோகிபாபுவின் திருமண செய்தி வந்தது.

ஆனாலும் அசராத சுஜி, யோகிபாபுவின் மனைவியுடன் இருக்கும் புகைபடத்தை பின்புலமாக வைத்து சோக கீதம் பாட தொடங்கியது தான் சிக்கலுக்கு மூல காரணம்

யோகிபாபுவின் திருமணத்திற்கு முன்பு சுஜி பாடிய காதல் டூயட்பாடிய போது கண்டு கொள்ளாதவர்கள், திருமணத்திற்கு பின்னர் கண்ணீரும் கம்பலையுமாக சுஜி செய்யும் குட்டிச் சேட்டைகளை ரசிக்க தொடங்கினர்.

இதனால் சல்லிக்காசுக்கு பெறாத லைக்குகள் சுஜிக்கு எகிறியது, யோகிபாபு உடனான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது, இது யோகிபாபு மனைவியின் கண்களில் பட குடும்பத்தில் உருவானது குழப்பம்.

90ஸ் கிட்ஸே பெண் கிடைக்காமல் கலங்கி நிற்க, எப்படியோ திருமணம் நடந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்த யோகிபாபுவின் வாழ்க்கையில் புகுந்த டிக்டாக் குட்டிச்சாத்தானால் புதிய சிக்கல் உருவானதாக கூறப்படுகின்றது.

அண்மையில் நடந்த காதலர் தினத்துக்கு கூட தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது போல சீரியசாக வீடியோ பதிவிட்டார் சுஜி..!

உடனடியாக சுஜியை தேடிப்பிடித்து என்னவென்று விசாரித்தால், தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தனக்கு சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாததால், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுக்க காமெடியாக இதுபோன்று வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு வருவதாகவும் கூறி எஸ்ஸாகி இருக்கிறார் இந்த நிஜ நடிகை சுஜி..! 

குடும்பத்தில் குழப்பம் விலகிய நிலையில், டிக்டாக்கில் காதலி வேடம் போட்டு தனக்கே விபூதி அடிக்க பார்த்த சுஜியை பார்த்தால் யோகிபாபுவின் மைண்ட் வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments