அமெரிக்காவிடம் 24 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது இந்தியா
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி அமெரிக்காவிடமிருந்து 24 எம்.ஹெச்60 ரோமியோ சீ ஹாக் ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு வாங்குவதற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டரை பில்லியன் டாலர் மதிப்பிலான 24 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் டிரம்ப் மோடி சந்திப்பின் போது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர்கள் கப்பலில் இருந்து இயக்கப்படக்கூடியவை .நீர்மூழ்கி மற்றும் எதிரிகளின் கப்பல்களை கண்டறிய இவை பயன்படுத்தப்படும். எம்.ஹெச்60 ரோமியோ சீ ஹாக் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்படுவது கடற்படைக்கு புதிய பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments