பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டன் குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றம்

0 1896

பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது.  குறைந்த சம்பளத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை விட்டுவிட்டு, இருக்கும் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதுடன்  கூடுதல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், இதர நாட்டவர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆண்டொன்றுக்கு 30 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து 25,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளால் பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் நெருக்கடியான நிலைமை ஏற்படும் என லேபர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments