அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - முதலமைச்சர் பழனிசாமி
அத்திகடவு அவிநாசி திட்டம் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய துரைமுருகன், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒவ்வொறு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும். தற்போது தான் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு, நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் விடப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, திட்டப்பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார்.
Comments