செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு விடுவிப்பு சான்றும், உடனடி உதவித்தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறி ஒடிசாவை சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவர் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த செங்கல் சூளை உரிமையாளர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுய விருப்பத்துடன் வேலை செய்பவர்களை சில தொண்டு நிறுவனங்கள் தங்கள் சுய லாபத்துக்காக கொத்தடிமைகள் என்று கூறி வருவாய்த்துறையினர் உதவியுடன் அழைத்துச் சென்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
Comments