செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில், வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி வியாழக்கிழமை நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments