உருட்டுக்கட்டையால் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

0 1444

மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை 3 பேர் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சத்தார்பூர் (Chhatarpur ) மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி பதிவு செய்யப்பட்ட வீடியோவில், இளைஞர் ஒருவரை தூணோடு சேர்த்து 3 பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் பிடித்துக் கொண்டு உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கும் காட்சி உள்ளது.

இதேபோல் உட்கார வைத்தும் கட்டையால் தாக்கும் காட்சியும் உள்ளது. தாக்குதலுக்கு ஆளான இளைஞருக்கும் இன்னொரு நபருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தொடர்பாக தகராறு நிலவுவதாகவும், அதனாலேயே அவரை 3 பேரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

சமூகவலைதளத்தில் பரவும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments