கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று அகழாய்வுப் பணிகளை அவர் துவக்கி வைத்தார்.
கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. முதல் மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையினரும் நடத்தினர்.
இதில் 2600 ஆண்டுகள் பழமையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் 6-ஆம் கட்டமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
Comments