அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமை செயலாளர் மனுதாக்கல்

0 685

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, புகார் குறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமை செயலாளர் தாக்கல் செய்துள்ள மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், அதில் புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments