டிரம்ப் வருகையையொட்டி யமுனையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - உ.பி. அரசு
தாஜ்மகாலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றிபார்க்க வரவுள்ளநிலையில், ஆக்ராவில் ஒடும் யமுனை நதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் கூடுதல் தண்ணீரை உத்தரப் பிரதேச அரசு திறந்து விட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 24ம் தேதி வரும் டிரம்ப், ஆக்ராவுக்கு தனது மனைவி மெலனியாவுடன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யமுனையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் கூடுதல் தண்ணீரை உத்தரப் பிரதேச அரசு திறந்து விட்டுள்ளது.
யமுனை நதி பகுதியில் வீசும் துர்நாற்றத்தை போக்கும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதாகவும், அந்த தண்ணீர் மதுராவை 20ம் தேதியும், ஆக்ராவில் 21ம் தேதியும் சென்றடையும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
Comments