கள்ளக்காதலுடன் வாழ குழந்தையின் தலையை பாறையில் மோதி கொன்ற தாய்

0 3582

கேரளாவில் கள்ளக்காதலுடன் வாழ 2 வயது குழந்தையின் தலையை பாறையில் மோதி கொடூரமாக கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கொடுவல்லியை சேர்ந்த பிரனவ்,சரண்யா தம்பதிக்கு 2 வயதில் வியான் என்ற குழந்தை இருந்தது. கணவருடனான கருத்து வேறுபாட்டால் குழந்தையுடன் தாய்வீட்டுக்கு வந்த சரண்யாவுக்கு திருமணமாகாத இளைஞருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் சேர்ந்து வாழ விரும்பிய சரண்யா குழந்தையை கொலை செய்து, அந்த பழியை பிரனவ் மீது போட திட்டமிட்டார்.

இதற்காக பிரனவை சமாதானம் பேசி 2 நாள்களுக்கு முன்பு வரவழைத்தார். பின்னர் இரவில் குழந்தையை பாறையில் மோதியும், கழுத்தை நெறித்தும் கொன்று கடற்கரையில் வீசிவிட்டு, பிரனவ் மீது புகார் அளித்தார். இருப்பினும் போலீஸார் விசாரணை நடத்தி சரண்யாவை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments