விவசாயிகளை ஊக்குவிக்க சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி - அமைச்சர்
மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் விவசாயிகள் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலையின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் மின் பழு அதிகம் உள்ள இடங்களில் நிலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு கட்சிப்பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
Comments