தமிழகத்தில் 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0 1028

தமிழகத்தில் ஆவின் பாலகம் அமைக்க கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

200 கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த கூட்டத் தொடரில் அமைச்சர் தெரிவித்ததன் நிலை என்ன என்றும் திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திருப்பத்தூர் கலைக்கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆவின் பாலகம் அமைக்கப்படும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments