குண்டு விழும் சத்தத்தை போலி எனக் கூறி சிரிக்கச் சொல்லும் தந்தை

0 1699

சிரியாவில் குண்டுவெடிப்பு பயத்தை போக்க, உண்மையிலேயே குண்டு விழும் சத்தத்தை போலி எனக் கூறி 4வயது குழந்தையை தந்தை சிரிக்க வைக்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இட்லிப் மாகாணத்தில் ஆங்காங்கே குண்டு வெடித்து வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரின் 4 வயது மகள் செல்வா குண்டு வெடிப்பு சப்தத்தை கேட்டு பயத்தில் அதிர்ந்து வந்துள்ளார். இந்த பயத்தை போக்க புதுவித விளையாட்டை கற்றுக் கொடுத்துள்ளார் தந்தை.

 

what a sad world,

To distract 4-year old Selva, her father Abdullah has made up a game.

Each time a bomb drops in Idlib #Syria, they laugh, so she doesn’t get scared.

pic.twitter.com/TCCaplvy95

— Ali Mustafa (@Ali_Mustafa) February 17, 2020 ">

அதன்படி குண்டு சத்தம் கேட்கும் போதெல்லாம் சிரிக்க வேண்டும் என்பது தான் அந்த விளையாட்டு. தந்தையின் சொல்படி குண்டுசத்தம் கேட்டு அந்த குழந்தை சிரிக்கும் வீடியோ வெளியாகி, இணையவாசிகள் பலரையும் உலுக்கி எடுக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments