குளிர்பதனக் கிடங்கில் வாயுக்கசிவு - 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு ,5 பேர் கவலைக்கிடம்

0 1739

ஹரியானாவில் குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஷாகாபாத் அருகிலுள்ள நல்வி கிராமத்தில் செயல்பட்டு வரும் கிடங்கில், நேற்றிரவு 9.30 மணியளவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது நிலமை கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறும் போலீசார், வாயுக்கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments