சிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை ஒரு 'கை' பார்த்த யானைகள்

0 1294

தாய்லாந்தில் சிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை இரண்டு யானைகள் ரசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள நகோன் சவான் என்ற இடத்தில் இரு யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக லாரிகளில் ஏற்றப்பட்டு வேறிடம் கொண்டு செல்லப்பட்டன. அப்போது சிக்னல் போடப்பட்டதால் இரு யானைகளும் லாரிகளில் நின்றபடி காத்திருந்தன.

அப்போது கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரி இரு யானைகளுக்கும் நடுவே நின்றது. தங்களுக்கு விருப்பமான கரும்பு கண்எதிரே இருப்பதைக் கண்டு குஷியான இரு யானைகளும் போட்டி போட்டுக் கொண்டு ருசி பார்த்தன. சிக்னலில் இருந்து கரும்பு லாரி புறப்படும் வரை இரு யானைகளுக்கும் கொண்டாட்டம்தான்!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments