மனிதர்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் விமானம்
ஐரோப்பிய நாடான குரேஷியாவில் மனிதர்கள் பறந்து செல்லும் வகையில் ட்ரோன் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்வதற்கும், படங்கள் எடுப்பதற்குமே இதுவரை ட்ரோன் வகை விமானங்கள் பயன்பட்டு வந்தன. இந்நிலையில் மனிதன் பறந்து செல்லும் வகையில் ட்ரோன்களை பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
பார்முலா ஒன் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் காரின் உருவத்தைப் போல ட்ரோன் வடிவமைக்கப்பட்டது. சுமார் 16 அடி நீளமும் 217 குதிரை சக்தி கொண்ட அந்த ட்ரோன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ட்ரோனில் 166 கிலோ எடை கொண்ட மனிதரைச் சுமந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறிய வகை விமானங்கள் மூலம் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியும் என்று அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments