அமிதாப்பையும் அவர் குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அமர் சிங்

0 1103

கடந்த காலங்களில் அமிதாப் பச்சனையும் அவர் குடும்பத்தினரையும் குறித்து இழிவாகப் பேசியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார் அமர் சிங்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அமர்சிங், அமிதாப்பின் குடும்பத்தினருடன் நெருக்கமான நண்பராகவும் இருந்தார். அமிதாப்பிற்கும் அமர்சிங்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டபோது அமிதாப் குடும்பத்தினரை குறிப்பாக ஜெயா பச்சனை அவர் கடுமையாக சாடினார்.

தற்போது நோய்வாய்ப்பட்டுள்ள அமர்சிங் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தமது தந்தையின் நினைவு தினத்தில் அமிதாப் பச்சன் அனுப்பிய இரங்கல் செய்தியால் மனம் நெகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இத்தருணத்தில் அமிதாப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்து தாம் பேசியவற்றுக்காக வருந்துவதாக அமர்சிங் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments