"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மூளை செயலற்ற இரண்டு பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் - 7 உயிர்களுக்கு புத்துயிர்
டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற இரண்டு பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர்.
இதில் ஏழு பேரின் உயிர்கள் காப்பற்றப்பட்டன. இரண்டு இருதயங்கள், நான்கு சிறுநீரகங்கள், நான்கு கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
சச்சின் என்ற 26 வயது தொழிலாளி, 61 வயதான மிட்டல் ஆகியோர் மருத்துவர்களின் கூற்றுப்படி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். நாள்தோறும் இந்தியாவில் பத்தாயிரம் பேர் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Comments