மும்பைத் தாக்குதல் : LET ME SAY IT NOW புத்தகத்தில் வெளியான கசாப் பற்றிய பரபரப்பான தகவல்கள்

0 1494

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பத்து தீவிரவாதிகளும் இந்துக்கள் பெயரில் அடையாள அட்டை வைத்திருந்ததாக மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராகேஷ் மாரியா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

LET ME SAY IT NOW என்று மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் எழுதிய புதிய புத்தகத்தில் இந்து என்று தோற்றமளிக்க கசாப் தனது கை மணிக்கட்டில் சிவப்புக் கயிறு கட்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

image

அது கசாப்பின் படங்களிலும் பதிவாகியுள்ளது. கல்லூரி மாணவர் என்றும் இந்து என்றும் போலியான அடையாள அட்டை தயாரித்து விசாரணையை திசை திருப்ப பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பைத் தாக்குதலில் மிகப்பெரிய ஆதாரமாக விளங்கிய கசாப்பை கொல்ல லஷ்கர் இ தொய்பா தொடர்ந்து முயற்சித்ததாக தெரிவித்துள்ள அவர் இதற்காக தாவூத் கும்பலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments