விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கையில் இருந்து வந்த ஆகேஷ்காந்த் என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அவரிடமிருந்து 824 கிராம் மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதைப்போன்று துபாயில் இருந்து வந்த கேரளாவை சேர்ந்த சொளகத் அலி என்பவர் மலக்குடலில் மறைத்து கொண்டு வந்த பசைவடிவிலான 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 426 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கோலாலாம்பூரில் இருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா மூலம் சென்னை வந்த 3 பயணிகளிடமிருந்து 771 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Comments