ஒரு மரத்தின் உண்மையான விலை என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..?
ஒரு மரத்தின் விலை என்ன என்றும், மரம் தனது வாழ்நாளில் தரக்கூடிய பிராண வாயுவிற்கு விலை உண்டா என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வீடுகள் கட்டுதல், நகரமயமாக்கல் போன்றவற்றால் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு மரங்களை வெட்டுவது தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
பொருளாதார நிபுணர்களும் சுற்றுச்சூழல் நிபுணர்களும் இணைந்து மரத்தின் உண்மையான மதிப்பீடு என்ன என்று நிர்ணயிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மரங்களை வெட்டாத வகையில் மேம்பால கட்டுமானத் திட்டத்தை மாற்ற முடியுமா என்று நீதிபதி போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தியது .
ஆனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு ஈடாக 5 மரங்கள் நடப்படும் என்று உறுதியளித்தார். விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலங்கள் அவசியம் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
Comments