ஆதார் எண்ணுடன் புகைப்பட அடையாள அட்டையை இணைக்க திட்டம்
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான சட்டரீதியான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
போலி வாக்காளர்களை நீக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்கள் தொகுதியில் பதிவு செய்திருந்தால் மட்டும் வாக்களிக்க முடியும். ஆதாருடன் இணைக்கப்பட்டால் அவர்களுக்கு இது வாக்களிக்க வாய்ப்பைத் தரும். தேர்தல் ஆணையத்துடன் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து சட்ட அமைச்சகம் நடத்திய ஆலோசனையை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2004-05 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை அமல்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். சட்ட செயலாளர் நாராயண் ராஜூ 40 சீர்திருத்தங்கள் பரிசீலினையில் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். புகைப்பட தேர்தல் ஆணைய அட்டையுடன் 12 எண் கொண்ட ஆதாரை இணைப்பதற்கு அரசு சாதகமான பதிலைத் தந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments