கொரோனா வைரஸ் - மற்ற நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடா ? மத்திய அரசு விளக்கம்
கொரோனா வைரசால் பரவிய கோவிட் 19 என்ற புதிய வகை நிமோனியா காய்ச்சலுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை என்றும் கடும் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மருந்துகளுக்கும் மருத்துவ சாதனங்களுக்கும் எந்த விதத் தட்டுப்பாடும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மருந்துகளின் விலை உயரும் என்ற அச்சமும் தேவையற்றது என்று தெரிவித்த நிதியமைச்சர், வெளிநாடுகளிடமிருந்து தேவை அதிகரித்துள்ளதால் மருந்துகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
Comments